டி எம் எஸ்
அவர்களின்
நவரசங்கள் !
நடிப்புக்கு ஒரு திலகம் -
நவரசங்களுக்கு ஒரு திலகம்
----- நடிகர் திலகம் !
பாடல்களில் நவரசங்களைக்
காட்டும்
திலகம் :
டி எம் எஸ்
!
இதில் மாறுபட்ட கருத்து என்பது
யாருக்கும்
இருக்காது !
எனக்கு மட்டும் அல்ல,
தமிழை
அறிந்தவர் அனைவரின் வாழ்வில் அன்றாடம் படும்
அனுபவங்கள் -
படிபினைகள் - கசப்புணர்ச்சிகள் -
அறிவுரைகள் - சோகங்கள் - மகிழ்ச்சி
.......
இன்னும் பலவற்றிலும் .....நமக்கு டி எம் எஸ்
பாடல்களை
நிவுகொள்ளும் வகைகளில் அவரின்
பாடல்கள் அமைந்திருக்கின்றன என்று சொன்னால்
அது
மிகைய்யாகாது !
வேறு எந்த பாடகருக்கும் இந்த
மாதிரி
" நவரசங்கள்
"
என்று பட்டியலிட்டு பாடல்களைத் தர , அந்த
பாடகரின் பாடல்கள்
அமைந்துள்ளனா என்று
கேட்டால்.......இல்லை என்றே சொல்ல முடியும்
!
இதோ, திரு. அனாமிகன், உங்களின்
விருப்பம்
நிறைவேருகிறது !
( எங்கள் வீட்டில் திரு
அனாமிகன்,
அவரது துணைவியாருடன் ! )
நவரசங்கள் என்றால்
எவை ?
எனக்குத் தெரிந்த வரையில் நவரசங்கள்
என்றால் :
1. மகிழ்ச்சி
2.
சோகம்
3. வீரம்
4.
காதல்
5. பயம்.
6. சிருங்காரம்
7. சாந்ந்தம்
8 .
அருவருப்பு.
9. கோபம்
போன்றவைகளை
சொல்லலாம்,
இவைகளில் சொற்கள் வேறு மாதிரியாக
எழுதி சொல்பவர்களும்
உண்டு !
என்னைக் கேட்டால் :
இந்த உணர்ச்சிகளையும்
தாண்டி மற்ற
பாவங்க்களையும் காட்டுப் பாடிய :
ஒப்பற்ற கலைஞன், நமது
டி எம் எஸ் !
சொல்லப்போனால் டி எம் எஸ் அவர்களின்
பாடல்களை
இந்த நவரசங்களில் மட்டும் அடக்க முடியுமா என்பது
சந்தேகமே
!
எனவே
பாசம் இன்னொரு
உணர்ச்சியையும்
இத்துடன் இணைத்திருக்கின்றேன்.
இன்னொரு செய்தி
:
என்னதான் டி எம் எஸ் பாடகளை இந்த
:
நவரச
பட்டியலில்
அடிக்கிவிட்டாலும், ஒவ்வொரு வகைக்கும்
:
எந்த பாடலை
சேர்க்கலாம் - எந்த பாடல்
மற்றவைகளில் சிறந்தவை
என்பதை தேர்ந்தெடுக்கும் முறையில் நமக்குள்
சண்டையே
வரலாம் !
அந்த
அளவுக்கு நம்ம டி எம் எஸ் , ஆயிரக்கணக்கான
பாடல்களைப் பாடியுள்ளார்
!
இங்கே, இந்த
எளியோன், என்னால்
முடிந்த வரையில்
நான் கேட்டும் வியந்தும்,
உணர்ந்தும் மகிழ்ந்தும் உள்ள சில
நவரசப்பாடல்களை
உங்களுக்கு அளிக்கிறேன் !
குறைகள் இருப்பின் அருள்
கூர்ந்து மன்னித்து
படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் !
மேலும்
சில வகை உணர்ச்சிகளுக்கு இடையே
மெல்லிய
வித்தியாசம்
இருக்கும், அதையும்
நீங்கள் கவனித்து பின்னர்
அதற்கேப்ப பொருத்தமான பாடல் /
பாடல்களைத்
தருவது உங்கள் பொருப்பு !
" என்னடா ! இப்படி நாம்
செய்தால் டாக்டர் கடுப்பு
ஆகிவிடுவாரா ! "
என்று தயவு செய்து
எண்ணாமல் நீங்களும்
கொடுக்கலாம் !
சரியா
!
இப்போது.......
டி எம் எஸ் அவர்களின்
நவரசப்
பாடல்கள்
!
மகிழ்ச்சி :
“ மகிழ்ச்சி “
இந்த உணர்ச்சியை உணர்த்தும்
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்
ஆயிரக்கணக்கில்
உண்டு.
அனைத்துப் பாடல்களும் நன்றாகவே
இருக்கும்.
ஆனால் என்னைப் பொருத்தவரையில் , நான் இன்று
வரை ரசிக்கும்
பாடல்களில் ஒன்று :
” உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக !
“
“ பாசம்” படத்தில் இடம் பெற்றுள்ள இந்த
பாடல்
இன்னும் எத்தனை தலைமுறைகள் தோன்றினாலும்
அழியாததும்,
மறக்கமுடியாத பாடலும் ஆகும் !
சிறுவர் சீர்திருத்தப் பள்ளியை விட்டு
வெளியே
வரும் எம்ஜிஆர், அந்த படத்தில் முதல் காட்சியில்
தோன்றுவார்.
எம் ஜி ஆர் கால்களைக் கண்டவுடன்
ரசிகர்களின் ‘விசில்’ சத்தம் பறக்கும்
!
அதற்கேப்ப மெல்லிசை மன்னர்களின் இசையைக்
கேட்டவுடன் நமக்கும்
உற்சாகம் தொற்றிக்கொள்ளும்!
வயலிஙளின் உற்சாக இசையைக் கொண்டு
ஆரம்பிக்கும்
இந்த பாடல், பின்பு பாடல் முழுக்க அதே ‘டெம்போ’
உடன்
இருப்பதும் மகிழ்ச்சியே !
கவிஞரின் எளிமையான வரிகள்,
படிப்பறியாதவருக்கும்
எளிதில் புரிந்துவிடும் சொற்கள்
:
எடுத்துக்காட்டு :
” எல்லாம்
எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என்
கோவில் ,
அவளே என்றும் என் தெய்வம் !
“
அன்னை யின் சிறப்பை
எளிமையாக
சொல்வதற்கு இதைவிட எளிமையான
சொற்கள் ஏது !
அதுவும் டி எம் எஸ் வாயால்
சொல்லும் போது!
இந்த வரிகளைப் படியுங்கள் :
”
தவழும் நிலவாம் தங்கரதம்!
தாரகைகள் பூத்த மணிமகுடம் !
குயில்கள்
பாடும் கலைக் கூடம் !
கொண்டது எனது அரசாங்கம் ! “
மேற்கண்ட வரிகள் நம்
‘சுக்ரவதனி. ஆர்க்’
க்கும்
பொருந்தும் அல்லவா !
டி எம் எஸ் குரல்
வளத்தைப்
பற்றி , வாலி சமீபத்தில் ஒரு வார இதழில்
சொன்னது !
” எம் கே தியாகராபாகவதர்
இறந்தவுடன் , அவரது
உடலை
அவர்கள் ......
தோண்டிய குழியிலேயா
புதைத்தார்கள்
?
இல்லையே !
டி எம் எஸ் அவர்களின்
தொண்டைக்
குழியில்
அல்லவா புதைத்தார்கள் ! ? “
( இந்த பாடலை முதலில் சீர்காழியை
வைத்து
பாடிய்தாகவும் பின்னர் அது சரிபட்டு வராமல்
போகவே டி எம் எஸ்
ஐ வைத்து பாடவைத்தகாகவும்
ஒரு செய்தி உண்டு, உண்மையா ? )
http://music.cooltoad.com/music/song.php?id=438797
***********************
சாந்தம்
‘ அமைதிக்கு
மறுபெயர் சாந்தம்!’
பாடலைக் கேட்டவுடன் உங்களின் மனது
அமைதி
பெறவேண்டும் , ஆறுதன் அடையவேண்டும் ,
‘ மன நிம்மதியைத் தரும்
ஒரு நல்ல பாடலைக்
கேட்டோம் !’
என்கிற ஆறுதலை அந்த பாடல் தரவேண்டும்
!
என்ன பாடல் அது ?
டி எம் எஸ் இதுமாதிரியான ஆயிரக்கணக்கில்
பாடல்
களைப் பாடியுள்ளார் !
அவரின் முருக பெருமானின் பக்திப்
பாடல்கள் அனைத்தும்
இதே மாதிரியான
ரகம்தான் !
ஆனால் திரைப்படப் பாடல்களில்
இந்த ரகத்தில்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் :
“
ஆறு மனமே ஆறு !
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ! “
“ ஆண்டவன் கட்டளை “ படத்தில் இடம் பெற்ற
இந்த
பாடலை....
டி எம் எஸ் நன்றாகவே பாடினார்,
கவிஞரும்
நன்றாகவே பாடலை எழுதினார் !
மெல்லிசை மன்னர்களும் நன்றாகவே
இசையமைத்
தார்கள் !
நடிகர் திலகம் என்ன
செய்தார்?
இவர்களை
எல்லோரையும் தூக்கி
சாப்பிட்டுவிட்டார்
!
ஆமாம், இந்த பாடலைக் கேட்டாலே நடிகர்
திலகத்தின்
அந்த :
” முற்றும் துணிந்தவர்களின் துறவிகளின்
‘சாந்தமான ‘
முகங்கள் நினைவுக்கு வருகிறதா
இல்லையா !
இந்த கேள்விக்கு பதில்
சொல்வதில் குழப்பமே
இல்லை !
நான்கு
முழ காவி வேட்டி,
‘ஷேவ்’ பண்னாத முகம்,
முகத்தில் ‘ அமைதி’ , ‘
வெறுமை ‘
அலட்சியமான, அவசரம் இல்லாத நடை !
பின்னாடி கோவில் கோபுரம்
!
சும்மா ஒரு பொட்டலம் வேர் கடலை வாங்கி
அதனை கொறித்துக் கொண்டே
நடக்கும் லாவகம்!
எல்லாமே அற்புதம் !
அதுவும் டி எம் எஸ்
அவர்களின் குரல்!
அந்த காலத்தில் ஒரு சிறந்த பாடலை
உருவாக்குவதற்கு
ஒரு போட்டியே இருந்தது !
அதற்கு இந்த பாடல் ஒரு
சிறந்த எடுத்துக்காட்டு !
http://www.mediafire.com/download/ql800
... ANTHAM.mp3
***********************
காதல்:
நவரசத்தில்
: ‘கருணை” யை நான் ‘காதல்’
என்று எடுத்துக்கொண்டு இந்த
பாடலைத்
தருகிறேன் !
திரைப் படங்களில் ‘காதல்’ தானே
மேலோங்கி
நிற்கிறது, அதனை சேர்க்காமல் இருந்தால் எப்படி !
டி எம் எஸ்
அவர்களின் காதல் பாடல்கள் ஆயிரம்,
ஆயிரம் !
எதை குறிப்பிடுவது,
சொல்லுங்கள் !
ஆனால், இந்த கட்டுரைக்காக நான் தேர்ந்தெடுத்த
பாடல்
:
” எங்கெல்லாம் வளையோசை
கேட்கின்றதோ,
அங்கெல்லாம்
என் ஆசை பறக்கின்றது !”
“ வெகுளிப் பெண்” படத்தில்
இடம் பெற்ற பாடல்
இது !
வி குமார் இசை, ஆர் முத்துராமன் நடிப்பு
,
கறுப்பு வெள்ளை படம், சரியாக ஓடாதது.....
இப்போது புரிகிறதா, இந்த
பாடல்
‘ஹிட்’ ஆகதற்கு காரணம் !
வேறு காரணங்கள் ஏதாவது உண்டா
!
இல்லையே !
டி எம் எஸ் இந்த பாடலில் என்ன குறை
வைத்தார்?
வி குமார் அவர்களும் என்ன குறை வைத்தார்?
இருந்தும்
பாடல் ‘ஹிட்’ ஆகவில்லை !
இந்த மாதிரியான அருமையான பாடல்கள்
ஹிட்
ஆகாமல் இருப்பது ஏராளம், ஏராளம் !
இந்த பாடலில் டி எம்
எஸ் ‘ காதல் கொண்டவனின்
எண்னங்கள’ மிக அழகாக
வெளிப்படுத்துவதாக
பாடுவது அற்புதம் !
முதல் பாராவில்
:
[b]”
சுகமான இசை பாடும் இள
மங்கையாளோ!
பதமாக நடமாடும் அவள் வண்ணத்தேரோ
!”[/b]
என்று பாடும் டி எம் எஸ் குரலில் தமிழ்
விளையாடுகிறது !
அதற்கு அப்புறம் அவர் கொடுக்கும்
“ஹம்மிக்”
குரலும் இளமை , இனிமை !
டி எம் எஸ் அவர்களின்
தமிழ்
உச்சரிப்பை கேளுங்கள் :
“ கரை போட முடியாத புது
வெள்ளை
ஆடை
!
கலைமானும் அறியாத
விழி
வண்ண ஜாடை!
பார்வையில்
இளமை,
வார்த்தியில்
மழலை
கூந்தலும் வணங்கும் காலடி
நிழலை
” ல”
“
ள”
“ழ “
இவைகளின் உச்சரிப்பைப் பாருங்கள்
!
மேற்கண்ட வண்ணமிட்ட சொற்களை எப்படி
அழகாக
உச்சரிக்கிறார் என்பதை கேளுங்கள் !
அதுதான் டி எம் எஸ்
!
’ வெகுளிப்பெண்
“
இரண்டு உபரி செய்திகள் - சுவையுடன்
!
இந்த படத்தை தயாரித்து இயக்கியவர்
:
எஸ் எஸ்
தேவதாஸ்.
இவர் என்னுடைய தாய் மொழியை
பேசுபவர்.
இயக்குனர் ஏ பீம்சிங் இடம் வேலை
செய்தவர்.
இல்லே...இப்படி சொன்னால் உங்களுக்கு உறைக்கும்
:
நடிகை
தேவிகா வின் கணவர்!
நடிகை கனகா வின் அப்பா !
இவர்
சமீபத்தில் எங்கள் சமூக பத்திரிக்கையில்
ஓர் அறிக்கை
கொடுத்தார்:
என்ன அறிக்கை தெரியுமா ?
” வெகுளிப் பெண் “
கள்ள
வீடியோவை யாராது வைத்திருந்தால் நான்
போலீஸில் புகார்
கொடுப்பேன் !”/b]
இது எப்படி இருக்கு !
( திரு ஈஸ்வரி எனக்கு
கொடுத்த கள்ள விடியோ
வை யாரும் அவரிடம் சொல்லிவிடவேண்டாம் !
)
[b][color=#FF0000]” எங்கெல்லாம்
வளையோசை”
பாடலை படமாக வேண்டும்.
அது சாதாரணமான பாடலாக
இருந்தாலும் டான்ஸ்
மாஸ்டர் வந்துதான் ‘ மூவ் மெண்ட்ஸ்’
கொடுத்து
படமாக்க வேண்டும் !
அந்த படத்தின் ‘டான்ஸ் மாஸ்டர்’ இந்த
பாடலுக்கு
இவர் போகாமல் ....
தன் சிஷ்யப் பிள்ளை யை
ஷூட்டிங்க்
செய்ய அனுப்பினார் !
அந்த சிஷ்யப் பிள்ளைக்கு செம கடுப்பு !
“
என்ன மாஸ்டர் ! இந்த பாட்டில் ‘டான்ஸ் “ யே
இல்லே ! இதுக்குப் போய் என்னை
அனுப்புகிறீர்கள்!
முத்துராம சாரை எதை சொல்லி டான்ஸ் ஆட
வைக்கிறது ?
“
என்று அலுத்துக்கொண்டே போனாராம் !
அந்த சிஷ்யப் பிள்ளையின்
பெயர் :
கமல்ஹாசன்!
http://www.mediafire.com/download/866dh
... AATHAL.mp3
***************
கோபம் :
" கோபம் "
என்கிற உணர்ச்சிக்கு பாடல்கள் அமைவது
என்பது அசாதாரணம்.
ஆனால் டி எம்
எஸ் அவர்களுக்கு, அது ஒன்றும்
அசாதாரணம் அல்ல,
அத்துபடி
!
கோபம் கொண்டு ( ! ) பாடும் பாடல்களை டி எம்
எஸ்
நிறையவே பாடியுள்ளார் !
" நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா
சொல்லுங்கள் !"
" என் மகன் "
" யாரடா
மனிதன் இங்கே கூட்டி வா அவனை இங்கே! "
" லட்சுமி கல்யாணம்
"
போன்ற பாடல்களை சொல்லலாம்.
ஆனால் நான் இங்கே
எழுத வந்தது,
" கண்ணா ! நீயும் நானுமா ! கண்ணா!
நீயும் நானுமா !
"
" கெளரவம்" படத்தில் இடம் பெற்ற
பாடல்.
புகழ் பெற்ற அரசாங்க வக்கீல் ரஜினி காந்த்,
தனது
வளர்ப்பு மகனை வக்கீலுக்கு படிக்க வைக்கிறார்.
அவனோ ஒரு
சந்தர்ப்பத்தில், தன் வளர்ப்பு தந்தைக்கு
எதிராக ஒரு வழக்கு விஷயத்தில்
வாதாடவேண்டிய
நெருக்கடி !
எப்படி இருக்கும் , ரஜினிகாந்த் க்கு
!
தன்னிடம் அன்பு காட்டிய ஒருவன்
தனக்கு எதிராக
கிளம்பினால்.........
கோபம் வராமல் பின்னே
என்ன புண்ணாக்கா வரும்
?
( மேலே நான் எழுதியதைப்
படிப்பவர்களுக்கு ஏதோ
நான் கோபத்தில் எழுதியதாக நினைக்க சாத்தியமுண்டு
!
நான் பாரிஸ்டர் ரஜினிக்கு 'சப்போர்ட்' பண்ணி எழுதினேன்!
என்னிடம் அன்பு கொண்டவர்கள் திடீரென்று
புரியாத
மாதிரி மாறினால்........
அவர்கள் மீது கோபம் கொள்ள
மாட்டேன்
.......
மாறாக.....மனம் வருந்தூவேன்.....மனம்
புண்படும்....அவளவுதான்
!
அந்த சமயத்தில் டி எம் எஸ்......இல்லே
சிவாஜி
படத்தில் பாடும் பாட்டு !
இந்த பாட்டில் டி எம் எஸ்
எப்படி 'கடுப்பாக பாடியிருக்கிறார்'
என்பதை பாருங்கள் !
" NEVER "
'NEVER
' என்று சொல்லும் இடத்தில் :
1. டி எம் எஸ் அந்த சொல்லில் கொடுக்கும்
:
அழுத்தத்தில்
கோபம் தெரிகிறது அல்லவா
!
2. அப்படி உணர்ச்சியைக் காட்டி பாடும்போது
நடிகர் திலகம்
பாடுவது போல் இருக்க வேண்டும் !
இரண்டையும் கச்சிதமாக செய்து முடிக்கிறார்,
டி எம்
எஸ் !
இந்த பாடல் ரிகார்டிங்க் சமயத்தில் டி எம் எஸ்
உணர்ச்சியுடன் பாடுகிறார்....
மெல்லிசை மன்னர் வேகமாக கைகளை
ஆட்டி
இசை போடுகிறார் !
வாத்தியங்கள் ஆர்ப்பரிக்கின்றன
!
வயலின் கள் இசை போடுகின்றன !
‘டிரம்ஸ்’ கள் அதிர்கின்றன
!
இதற்கும்
இடையில்
:
” சூபர்....
டி எம் எஸ் ! “
என்றது ஒரு குரல்
!
யார் சொல்வது ?
ரிகார்டிங்க் ஐ
பார்க்க
வந்து கண்களில் ஆனந்தக் கண்னீர்
பொங்க
சொன்னவர்......
சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன்
!
http://www.mediafire.com/download/k7mvk
... /KOPAM.mp3
************
பயம்
”
ஒவ்வொருத்தனுக்கு
பயம் என்றாலே பேச்சே
வராது !
இதில் பாட்டு
எங்கே வரும் ! “
சொன்னவர் :
திரு. எஸ் கே
ராஜா.!
சாருக்கு சொந்த அனுபவம் போலும்
!
”எப்படி சொல்கிறீர்கள் ? “
என்கிறீர்களா !
இதோ திரு .
எஸ் கே ராஜா சார் சொல்கிறார் :
In my house, a 'CAN' is getting ready for me! Voodu katti
adippaanga!
( தமிழாக்கம் :
“ எங்க ஊட்லே ஒரு “ டப்பா”
தயாராக
இருக்குப்பா!
வூடு கட்டி அடிப்பாங்க!
)
viewtopic.php?f=184&t=18860&start=255
நான்
சொன்னது சரிதானா, சொல்லுங்கள் !
வடிவேலு :
” யோவ், டாக்டரூ!
எங்க ராசாக்கண்ணு ( ! ) வை
ரொம்பவே
ரேய்க்காதேப்பா ! அப்புறம் நா ‘கம்’னு
இருக்க மாட்டேன்
!
அவரூ என் மேலே ‘பாசமலர்’ கண்க்கிலே பாசம்
வெச்சிருக்கார்! அத்தே
நினைச்சா........
இப்போ எங் ‘கர்சீப்’ ஐ பிழிஞ்சா......
தண்ணி
கொட்டுதுப்பா....கண்ணுத் தண்ணி! ஆங்!”
பயத்திலே பேச
முடியாது !
கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது !
பின்
எப்படி பாட முடியும் ?
டி எம் எஸ் பாடுகிறார்!
”
நதியினில் வெள்ளம்!
கரையினில் நெருப்பு !
இரண்டுக்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு!
ஏன் இந்த சிரிப்பு ? “
“
தேனும் பாலும் “ படத்தில் இடம் பெற்றுள்ள
இந்த பாட்டில் டி எம் எஸ்
:
பய
உணர்ச்சியுடன்
பாடுகிறார் என்பது என்னுடைய
தாழ்மையான
அபிப்பிராயம் !
ஒரு மனைவியைப் பெற்றவரே
பயப்படும்
போது, இரண்டு மனைவிகள் என்றால் நிச்சயம்
பயம் இருக்கும்
அல்லவா !
‘எப்படி இந்த பாடல் பய உணர்ச்சியில் சேரும்?’
என்று நீங்கள்
கேட்கலாம் !
டி எம் எஸ் அவர்களின் குரலைக் கேளுங்கள்.
அதிலும் இந்த
வரிகளை அவர் உச்சரிக்கும்
விதத்தை கேளுங்கள் :
“ ஏன் இந்த சிரிப்பு ?
“
இப்படி டி எம் எஸ் பாடும் போது அவர்
குரலில்
பய
உணர்ச்சி
தென்படவில்லை ?
அதன் பின்னர் வரும் மெல்லிசை
மன்னரின்
’டிரம்பட்’ ஒலி
இன்னும் பய
உணர்ச்சியைத் தரவில்லை ?
பாடல் முழுவதும் .........
டி எம் எஸ்
குரலில் :
இந்த பக்கம் வெள்ளம், அந்த
பக்கம் நெருப்பு - இனி
என்ன நடக்குமோ? “
என்கிற
பயம் அவர்
குரலில்
தோன்றுகிறது அல்லவா ?
பய உணர்ச்சி தென்படும் டி
எம் எஸ்
அவர்களின் வேறு பாடல்கள்
இருப்பின்
தெரிவிக்கவும்.
http://www.mediafire.com/download/o4wle
... /BAYAM.mp3
********************
அருவருப்பு
இந்த ‘
அருவருப்பு ‘ என்கிற உணர்ச்சியை வெறும்
வார்த்தைகளால்
சொல்லிவிடலாம்....
” கரப்பான் பூச்சி மேலே
வந்து
உட்கார்ந்திடுச்சிப்பா.....சே....சே....!
“
என்றால் அருவருப்புதானே !
ஆனால் அதனை - அந்த
உணர்ச்சியை
எப்படி பாட்டில் கொண்டுவருவது ?
டி எம் எஸ் க்கு அதுவும்
கைவந்த
கலைதான் !
இந்த அருவருப்பு என்கிற
உணர்ச்சியை மற்ற
பாடகர்கள் பாடியிருக்கிறார்களா என்பது
எனக்குத்
தெரியாது !
ஆனால் டி எம்
எஸ்
பாடியிருக்கிறார் !
”
நாணம் இல்லை உங்கள் கண்களுக்கு!
நாலும் இல்லை இந்த பெண்களுக்கு
!
போகப் போக மிச்சம் இருப்பது
போய்விடுமோ!
ஒ.ஓஹோ....ஹோ.......
ஆ...ஹா....ஹா ......அய்யஹோ !
“
“ அன்பு வழி “ படத்தில் இடம் பெற்ற இந்த
பாடலை
அருவருப்பு லிஸ்ட் இல்
சேர்க்கலாம்
!
எப்படி ?
” பருவத்தை காட்டும் போட்டியோ!
போட்டியில் ஆயிரம்
பாட்டியோ ! “
18 - 20 வயது அழகிய பெண்கள் கலந்து
கொள்ளும் ‘அழகிப்
போட்டியில் ‘ திடீரென்று
நடிகை செளகார் ஜானகி யும் கலந்து
கொண்டால்..
நமக்கு என்ன ஏற்படும் ?
அருவருப்பு தானே
!
இந்த பாடலில் டி எம் எஸ் அவர்களின்
குரலைக்
கேளுங்கள் !
’ அன் சகிக்கபுள்”
தன்மை ஒலிக்கின்றது
அல்லவா !
” போகப் போக மிச்சம் இருப்பது
போய்விடுமோ
?”
என்று பாடும்போது பயத்தை விட
‘அசிங்கம்’ அல்லது
‘அருவருப்பு’ உணர்ச்சிதானே
தோன்றுகிறது !
இது
மட்டுமா!
“ஒ.ஓஹோ....ஹோ.......
ஆ...ஹா....ஹா ......அய்யஹோ !”
என்று டி எம் எஸ் புலம்புவது....
அருவருப்பின்
உச்சக்கட்டம்
என்றும் சொல்லலாம்
!
http://www.mediafire.com/?qhagz1fzxkk
***************
சோகம்
( 'பிராப்தம்’
படம் : நன்றி : திரு. வியார் )
பொதுவாக சோகப் பாடல்களைக்
கேட்டாலே
நமக்கு பிடிக்காது !
அந்த மாதிரி பாடல்களைக் கேட்க நமக்கு
:
MENTAL
PREPARATION
பண்ணிக் கேட்கவேண்டும் !
” பெண்ணே ! உன் கதி
இதுதானா!
உன் பெண்மை , ஆண்மைக்கு பலிதானா !”
என்று
சி எஸ்
ஜெயராமன்
பாடுவதை கேட்க , அதற்கான மன நிலையை
நாம்
எற்படுத்திக்கொள்ளவேண்டும்!
ஆனால்.....
டி எம் எஸ் அவர்களின்
சோகப் பாடல்
விஷயத்தில் அது தேவையே இல்லை !
எப்போது வேண்டுமானாலும்
கேட்கலாம் !
” ஒரே பாடல் உன்னை அழைக்கும்”
எப்போது
வேண்டுமானாலும் கேட்கலாம் !
நடந்து வந்த பாதையிலே நாலு
வழி
பார்த்திருந்தேன்...நல்லது கெட்டது புரியவில்லை!
நல்லவர் எல்லாம்
வாழ்வதில்லை !”
எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்
!
”
முத்து நகையே உன்னை நான்
அறிவேன்!”
- எப்போது
வேண்டுமானாலும் கேட்கலாம் !
” இதயம் இருக்கின்றதே தம்பி !
இதயம் இருக்கின்றதே -
வாழும் மனிதருக்கும்
வாடிடும் ஏழைகளுக்கும் இதயம்
இருக்கின்றதே,
தம்பி !”
- எப்போது வேண்டுமானாலும்
கேட்கலாம் !
” பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
!”
- எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !
” காவலும் இல்லாமல்
வேலியும்
இல்லாமல் தர்மம் கலங்குதம்மா!
பாதை புரியாமல் போக முடியாமல்
என்
கால்கள் தயங்குதம்மா !”
- எப்போது வேண்டுமானாலும்
கேட்கலாம் !
இப்படி பல நூறு பாடல்கள் !
ஆனால் இங்கே
நான் குறிப்பிட நினைப்பது :
” தாலாட்டு பாடி தாயாக வேண்டும் !
தாளாத என் ஆசை
சின்னன்ம்மா! - வெகு
நாளாக என் ஆசை சின்னம்மா !”
“ பிராப்தம்’ படத்தில் இடம் பெற்ற
பாடலில்,
சிவாஜியின் , எஜமானானின் மகளாக
வருகிறார்,
சாவித்திரி.
எஜமானனின் மகள் என்பதால்
மிகவும்
அன்புடனும் பாசத்துடனும் பழகுவார், அந்த
படகோட்டியாக வரும்
சிவாஜி.
சாவித்திரி மணம் புரிந்து புகுந்த வீட்டிற்கு போகும்
போது
கூட மிகுந்த பாசத்துடன் : “ நேத்து பறிச்ச
ரோஜா’ என்று பாடி வழியனுப்புவார்
!
அதே சாவித்திரி, விதவையாக தந்தையின் வீட்டுக்கு
திரும்பி
வரும்போது துடியாய் துடித்து போய்விடுவார்
சிவாஜி !
இந்த
சூழ்நிலையில் பாடும் இந்த பாடலில் சோகம்
நிரம்பி வழிந்தாலும் எத்தனை தடவைகள்
கேட்டாலும்
அலுக்காத குரல், இசை ...எல்லாம் !
பாடல் முழுக்கு டி
எம் எஸ் இன் குரலைக் கேளுங்கல்!
ஓர் இடத்தில் அவர் அழ ஆரம்பித்துள்ளார்
!
”
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது,
ஆனாலும் வழி என்ன , தாயே !
அறியாத
பெண்ணல்ல கனவோடு உறவாடு,
சுமைதாங்கிக் கல்லாக நீயே !”
இந்த மாதிரி அழுதுகொண்டே , உணர்ச்சியுடன்
பாட
இந்தியாவிலே யார் உண்டு - ஒருவரைத்
தவிர !
அவர் : முகமது ரபி !
இந்த அழுகையுடன் டி எம் எஸ்
பாடுவது அந்த
பாடலின் சூழ்நிலைக்கு
வலு
சேர்ப்பதாக அமைகிறதல்லவா
!
அது மட்டுமா !
இதனை புரிந்து கொண்டதால்தான் மெல்லிசை
மன்னர்
டி எம் எஸ் இன் குரலுடன் ,
நடிகையர் திலகம்
சாவித்திரியின்
குரலில் :
”
கண்ணா”
என்று சொல்லும் இடம் அற்புதம்
!
இந்த “கண்ணா” என்று சாவித்திரி சொல்லும்
போது, டி எம் எஸ்
மிகவும் உணர்ச்சி வசப்
பட்டு சாவித்திரியை பாராட்டினாராம் !
” நான் எத்தனை நன்றாகப்
பாடினாலும்
நீங்கள் “ கண்ணா!” என்பதை அழகாக உச்சரித்து
பாட்டின்
தன்மையை கூட்டிவிட்டீர்கள், அம்மா!”
என்று சாவித்திரியை
பாராட்டினாராம் , டி எம் எஸ் !
( நான் கொடுத்த இந்த பாட்டில்
சவித்திரியின் வசனம்
இடம் பெற வில்லை . வேறு யாராவது இந்த
பாடலை
சாவித்திரியின் வசனத்துடன் தர இயலுமா ? )
இதே மாதிரி “
குலவிளக்கு” படத்திலும் “ மேகம் திரண்ட
நேரத்திலே தாகம் எடுக்க வில்லை
“
என்கிற பாடலில் , அருமையாகப் பாடும் டி எம் எஸ்
குரலுடன்
:
”நடிகை
சரோஜா தேவியின் பயங்கர
இருமல் ஒலி, பாட்டின் சோகத்திற்கு வலு
சேர்க்கும்!”
நடிகை சரோஜாதேவியையும் டி எம் எஸ்
மனதாரப்
பாராட்டினாராம் !
http://www.mediafire.com/download/7bffx
... /SOGAM.mp3
******************
வீரம்
டி எம் எஸ்
அவர்களின் மறு பெயரே வீரம் தானே!
இவர் வீரத்துடன் பாடிய பாடல்கள் பல
நூறு
இருந்தாலும் , அனைவரும் ஒன்று சேர தெரிவு
செய்யும் பாடல்
:
” அச்சம்
என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிட உடமையடா ! “
“
மன்னாதி மன்னன்” படத்தில் இடம் பெற்ற இந்த
பாடல் வேகம் மிகுந்த பாடல்
!
டி எம் எஸ் பாடலின் ஆரம்பத்திலேயே வேகுத்துடன்
விவேகத்துடன் ,
வீரத்துடன்
பாட ஆரம்பித்துவிடுவார்
!
போதாக்குறைக்கு மெல்லிசை மன்னர்களில் குதிரை
களின் குளம்பொலி
!
வயலின் களின் வேகமான வீச்சு !
போதாக்குறைக்கு கண்ணதாசனின்
ஊக்கம் மிகு
வார்த்தைகள் !
தூங்கும் போது இந்த பாட்டைக்
கேளுங்கள் !
தூக்கம் போய்விடும் !
மயிர்க்கூச்செரிடும்
!
கோழையை தைரியசாலியாக ஆக்கிவிடும்
இந்த பாடல் !
” வாழ்ந்தவர்
கோடி, மறைதவர்
கோடி....
மக்களின் மனதில் நிற்பவர் யார் “
நிச்சயம் டி எம் எஸ்
தான்!
http://www.mediafire.com/download/8lqoi
... /VERAM.mp3
***********************
சிருங்காரம் :
( அழகு
)
1. ஒரு
நடிகனுக்கு நடிப்பு அழகு !
2. ஒரு நடிகைக்கு உடல் வனப்பு அழகு
!
( நடிகை நன்றாக நடித்தால் எவன் பார்க்கிறான்! )
3. ஒரு
இசையமைப்பாளனுக்கு , அவனி இசை
அழகு !
4. ஒரு ஆசிரியருக்கு
போதிப்பது அழகு !
5. ஒரு மருத்துவனுக்கு நல்ல
மருத்துவம்
பார்த்தல் அழகு !
( நான் ‘கிளினிக்” இல் உட்கார்ந்து
‘பிராக்டிஸ்’
பன்ணும் அழகே அழகுதான் ! )
அது
போல....
ஒரு பாடகனுக்கு
நன்றாக
பாடுவதுதான்
அழகு
!
டி எம் எஸ் இதில்
என்ன
குறை வைத்தார் ? !
( சுரைய
கோஷல் என்கிற பெண் பாடகி பார்க்க
அழகாக இருப்பார். பாடினால் ‘தமில்’
அழகாக
இருக்கும் ! )
” I Will Sing For You !
I Will Dance For You ! "
” மனிதருள் மாணிக்கம் “ படத்தில் இடம் பெற்ற
இந்த
பாடலில் :
டி
எம் எஸ் எத்தனை ரகங்களில்
பாடியுள்ளார்
:
கர்நாடக,
மேற்கத்திய,
மலையாள்,
தெலுங்கு
என்று பல வகைகளில் பாடியுள்ளார் !
இது சிருங்காரம் தானே
!
” பெண்ணே உன்
கையில்
ராஜாங்கம் இருந்தால் எல்லோரும் ஆடணுமா!
ராஜாதி ராஜனும்
ரவிக்கைக்கு பயந்து
பின் பாட்டு பாடணுமா ?
“
இது என்ன ?
அந்த காலத்தில் இந்திரா
காந்தி,
காமராஜ் ஐ ‘ ஆட்டிப் படைத்ததை ‘
கண்னதாசன் கண்டனம்
தெரிவிக்கும் ஸ்டையில்!
*******************
பாசம்
:
டி எம்
எஸ் அவர்களுக்கும் பாசப் பாடல்களுக்கும்
நெருங்கிய தொடர்பு உள்ளது
!
பல பாடல்கள் ! அனைத்தும் மிக புகழ் பெற்றவை!
அவைகளை இங்கே
பட்டியலிட்டால் என்னத்
திட்டுவீர்கள் !
“ ஏன் யா ! இதெல்லாம்
எங்களுக்க்த் தெரியாதா!”
என்று கூட சொல்வீர்கள் !
இதை மனதில்
கொண்டுதான்
டி எம் எஸ் அவர்களின் ஒன்பது நவரசப்
பாடல்களுடன் “ பாசம்
“ என்கிற
உணர்ச்சியை சேர்த்து விட்டேன்
!
” இனிமேல் எனக்கென்ன கவலை- என்
இதயம் பார்ப்பது மகளை
!
உறவே எனக்கு அவள் எல்லை !
இனி உலகம் வேறு எதுவும் இல்லை
!”
“ மகளுக்காக” படத்தில் இடம் பெற்ற இந்த
பாடல்
டி எம்
எஸ் அவர்களின் :
“பாசமான பாடல்களில் “
எனக்கு பிடித்த பாடல்
!
படத்தில் ஏ வி எம் ராஜன் பாசமுள்ள
தந்தையாகவும்
அவரது மகள் ஆக ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா
வருவார்கள்
!
சிறையில் இருக்கும் தந்தை, தன் மகளைப் பார்க்க
“பரோல்” இல்
இருந்து வருகிறார் என்று நினைக்கிறேன் !
அப்போது இந்த பாடல் ஏ வி எம் ராஜன்
தன்
மகளை நினைத்து பாடுவது போல் காட்சி !
இந்த பாடலில் டி எம்
எஸ் பாடும் உணர்ச்சி மிக்க
வரிகளை ராஜன் மிகுந்த செறிந்த நடிப்போடு
படமாக்கி
இருப்பதை நான் ரசித்தேன் !
ஒரு தந்தை, தன்
மகளை நினைத்து
பாடும்
அற்புதமான வரிகளைக் கொண்ட
பாடல்
!
நம் சுக்ரவதனியில் சுமார்
5 வருடங்களுக்கு முன்னர்
ஒரு சகோதரி
உறுப்பினர்,
“ என் தந்தையின் நினைவாக எனக்கு
யாராவது
இந்த பாடலை வழங்க முடியுமா ? “
என்று
கேட்டிருந்தார்.
யாருமே இந்த பாடலை அவருக்கு
வழங்க வில்லை
!
காரணம் ?
யாரிடமும் இந்த பாடல் இல்லை
!
அந்த சகோதரி மறுபடியும் கடிதம்
போட்டு
:
“ யாருமே, என் தந்தையை நினைவு படுத்தும்
பாடலைத்
தரமுடியவில்லையா ? “
என்று மிகுந்த வருத்ததுடன் கேட்க
ஆரம்பித்தார்!
எனக்கு மிகுந்த வருத்தமாக போய்
விட்டது.
என்னிடம் பாட்டு இல்லையா ?
இல்லை......இருந்தது !
எப்படி இருந்தது தெரியுமா ?
ஆடியோ காஸ்ஸட்
வடிவில்
இருந்தது !
அப்போது
”சுக்ரவதனி
குடும்பம்”
இல்லை!
( ஏன் , இப்போதுகூடத்தான்
:
”சுக்ரவதனி
குடும்பம்”
இல்லை, கொடுமை ! )
எனவே நான்
யாரிடம் ‘ஆடியோ காஸ்ஸட்’ ஐ
எம்பி 3
ஆக்குவது என்பது தெரியவில்லை
!
ஆனாலும் அந்த சகோதரிக்கு உதவ
வேண்டும் என்று
தீர்மானித்து விட்டேன்!
என்ன செய்வது ?
கீழ் கண்டவாறு
செய்தேன்!
1. “ டேப் ரிகார்டரில் ‘ அந்த
பாடல் அடங்கிய
‘காஸ்ஸட்’ ஐ சொருகினேன் !
2. அந்த பாட்டு
தொடங்கும் போது, என் செல்பேசியில்
அந்த பாடலை பதிவு செய்தேன்
!
3. செல்பேசியில் பதிவு செய்த பாடலை கேட்டேன்!
பாட்டு நன்றாகவே
‘ரிகார்ட்’ ஆகியிருந்தது ---
கூடவே கார் ‘ஹார்ன்’ ஒலியுடன்
கேட்க வேண்டியிருந்தது
!
4. மறுபடியும் செல்பேசி !
போட்டேன் ,
கேட்டேன் !
கூடவே மின் விசிறி சுற்றும் ஒலி
!
வாழ்க்கையை வெறுத்தேன் !
இரவு 12 மணி , ஊர்
அடங்கும் நேரம்!
5. மறுபடியும் செல் பேசி !
பாடல்
ஓகே !
கூடவே
ரோட் நாய் குரைக்கும்
ஒலியுடன் !
6. கதவுகளை
சாத்தினேன் ! மின் விசிறி ‘ஸ்விட்ச் ஆப்!”
செல் பேசி , கேட்டேன் - ஓகே
!
7. செல் பேசியை கம்பூடரில் இணைத்தேன் , அதில்
பாட்டை
இறக்கினேன் !
8. எம்பி 3 ஆக்கினேன் ! அந்த பாடலைக்
அந்த
சகோதரிக்கு கொடுத்தேன் !
அந்த சகோதரி எனக்கு மிகுந்த
மகிழ்வுடன் எனக்கு
நன்றி சொன்னார் !
இப்போது
நான் தரும் இந்த பாடல்
மேற்கண்ட
முய்ற்சியால்
உண்டானதுதான்!
இப்போதாவது இந்த
பாடலை இன்னும் சிறந்த
முறையில் யாராவது தரமுடியுமா ?
கடைசியாக:
Residential Boading School
இல்
படித்துக்கொண்டிருக்கும் என் மகளைப்
பிரிந்து இருக்கும் நான்
அடிக்கடி
விரும்பிக் கேட்கும் பாடல் இது
!
http://www.mediafire.com/download/ujcid
... PAASAM.mp3
எம்