வடிவேலுவும், நானும் !
( வடிவேலுவும் நானும் அடிக்கடி சந்திப்போம்!)
நான் : “ என்னடா! இங்கே கூட நீ வந்துட்டியா!
‘ தும்ட்டி!”
வடிவேலு : ”என்னா, வாத்தியாரே ! நீ மனசு சரியில்லாமத்தான் நீ இங்கே வந்திருக்கேன்னு எனக்குத் தெரியும் ! நீ எங்கே போவியோ அங்கே எல்லாம் நானும் வருவேன், ஆ....ஆங்க் !
‘sநான் : ” நாராப்பாடை ! நீ ஒரு பெரிய பிபிஎஸ் ஸு ! ‘ இதயக்கமலம்’ பாட்டு பாடவந்துட்டே!நான் மனசு சரியீலை என்னா , நான் பொறந்த வீட்டை மறப்பேனா, தடி ராஸ்கல் ! “
aவடிவேலு :’ உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா, என்னா ! நன்றி மறவாதவன் நீ! நான்கூட அப்படித்தான், நய்னா ! சரி, சரி , மனசை தெம்பு பண்ணிக்கோ ! உன் படைப்பை எத்தினி பேர் படிக்கிறாங்கோ தெரியுமா!
eநான் : ’ அட போடா ! யார் படிச்சுட்டு மகிழுனுமோ அவங்க காணோமே ‘ மம்முட்டி’ தலையா !
வடிவேலு :” அட ! மண்ணை வெட்டுற தே ‘ மம்டி’ ந்னு இங்கே சொல்வாங்கோ ! அது என்னா ய்யா ‘ மம்மூட்டி? ‘
நான் :” அதுவா ! நீ நடிகர் மம்மூட்டி மாதிரி தலை முடி வெச்சிருக்கே ! அத்தான் ! ( = ‘ அது தான்’ ! ) சரி, சரி, நான் இப்போ எதுக்கு இங்கே வந்தேன்னு உனக்குத் தெரியுமா? ‘
வடிவேலு : சொல்லேன் வாத்தியாரே ! நீ ரொம்ப ரீஜெண்டு ! விஷயம் இல்லாமே இங்கே வரமாட்டே , சர்த்தானா!’
நான் :’ சரிடா, கேப்மாரி !’
” டி எம் எஸ் அவர்களின் ஒன்பது நவரசப் பாடல்களைப் பற்றி நான் இங்கே எழுத வந்திருக்கேன் ! கேட்டுக்கோ !’
வடிவேலு :’ நீ சொன்னா நா என்னா சொல்லப்போறேன் ! ஆமா, தக்காளி ரசம், பருப்பு ரசம் , எலுமிச்சங்கா ரசம் --- இத்தே எல்லாம் நான் கேள்விப் பட்டிருக்கேன் .......... அத்தே ஏன் கேக்குறே !
பாதரசம் கூட கேள்விப்படிருக்கேன் - நீ ‘ டிக்ரீ ‘ பாப்பியே, அதுலே இருக்குதுஇல்லே !
சரி! அது என்னா ‘ நவரசம் ? “
நான் :’ மூதேவி !...................................!”
வடிவேலு :’ ஓ , நவரசம் என்ன மூதேவியா !”
நான் : ” உன்ன தூக்கி வெய்யிலிலே போட!
‘ நவரசம்’ என்னா ஒன்பது வகை உணர்ச்சிகள் !
நீ ஒரு மரமண்டை !
சரி, நான் இப்போது ‘கிளினிக்’ போகணும் !
அடுத்த தடவை உன்கிட்டே பேசுறேன் !”
வடிவேலு :’ சரி , வாத்தியாரே ! எத்தையாவது மனசுலே போட்டுக்குனு கவலைப் படாம போ, நய்னா!
“ எல்லாம் நல்லபடியாக நடக்கும்!”
எம்கேஆர்சாந்தாராம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக